Sunday, September 30, 2012

Cure heart attack.. Following water treatment !!!

0 comments
It is popular in Japan today to drink water immediately after waking up every morning.

Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers.

For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases:

Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders,
ear nose and throat diseases.

METHOD OF TREATMENT:

1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water

2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute

3.. After 45 minutes you may eat and drink as normal.

4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours

5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:

1. High Blood Pressure (30 days)

2. Gastric (10 days)

3. Diabetes (30 days)

4. Constipation (10 days)

5. Cancer (180 days)

6. TB (90 days)

7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwards – daily..

This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times.
It is better if we continue this and make this procedure as a routine work in our life. Drink Water and Stay healthy and Active.
This makes sense .. The Chinese and Japanese drink hot tea with their meals ..not cold water. Maybe it is time we adopt their drinking habit while eating!!! Nothing to lose, everything to gain…
For those who like to drink cold water, this article is applicable to you.
It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion.

Once this ‘sludge’ reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine.
Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.

A serious note about heart attacks:

· Women should know that not every heart attack symptom is going to be the left arm hurting,

· Be aware of intense pain in the jaw line.

· You may never have the first chest pain during the course of a heart attack.

· Nausea and intense sweating are also common symptoms.

· 60% of people who have a heart attack while they are asleep do not wake up.

· Pain in the jaw can wake you from a sound sleep. Let’s be careful and be aware. The more we know, the better chance we could survive…

A cardiologist says if everyone who gets this BLOG sends it to everyone they know, you can be sure that we’ll save at least one life.
Continue reading →

வாரம் ஏழு முட்டைகள்......... மரணம் விரைவிலேயே !!!!

0 comments
முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு!

அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆ
பத்து அதிகமாம்.

நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.

இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..

எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே ! மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.

முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.
Continue reading →
Saturday, September 29, 2012

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு!!!

0 comments
பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு!

பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சாதாரணமாக விண்ணப்பிக்கப்படும் பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1000 ரூபாயில் இருந்து ரூ.1500 ஆகவும்.

தட்கல் முறை மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் ரூ. 2,500 லிருந்து ரூ. 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சாதாரண பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் 40 அமெரிக்க டாலரில் இருந்து 75 டாலர்களாக உயர்த்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Continue reading →
Wednesday, September 26, 2012

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

1 comments
         பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொ ண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதை யும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.
Continue reading →
Sunday, September 23, 2012

வாயுப் பிரச்சனைகள் (GAS TROUBLE) . . . .

23 comments
வாயுப் பிரச்சனைகள் (GAS TROUBLE) . . . .

மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம். அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான்.

பொருள் . . .


ஏப்பம் கௌரவ அந்தஸ்துகளில் ஒன்று பல முக்கியஸ்தர்கள் சூழ்ந்த கௌரவமான இடங்களில் டர் என்ற நம்மையாறியாது திடீரென வெளிப்பட்டு எல்லோரையும் தர்மசங்கடமான நிலையில் நிறுத்திவிடும். பெருந்தன்மையான குணம் கொண்டது. இந்த வாயுக்கோளாறு கூட்டத்திலும் அமைதியாக வெளிப்பட்டு நாற்ற மிகுதியால் நல்லவரையும் சந்தேகப்படவைத்துவிடும் இயல்பு கொண்டது. நாகரிகவாழ்வும் , செயற்கை உணவும் சோர்ந்தளிக்கும் அன்புப் பரிசுதான் இந்த வாயுக் கோளாறு. கம்பீரமாக ஏப்பம் விடுவது என்பது வசதி மற்றும் கெளரவம் – அந்தஸ்துகளில் ஒருபடியாகக் கருதப்படுகிறது. வயிற்றில் உண்டான வாயு அதிகமான நிலையில் அழுத்தத்துடன் வெளியேறும் நிகழ்ச்சியே.

ஏப்பம் எனப்படுவது. ஆனால் அது அப்படி வெளியேறாது உடலின் உள்ளேயே தங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களது ஆரோக்கியம் நோய்களில் சிக்குண்டு மருந்துக்கடைகளிலோ அல்லது மருத்துவ மனைகளிலோ ஏலத்துக்கு வந்து விடுகின்றது.

அண்டவெளில் ஏற்படுகின்ற வாயுவின் அழுத்தம் புயல் என்னும் பெயரில் சில நேரங்களில் பெரும் சேதாரங்களை உண்டு செய்து விடுவதுண்டு. அதுபோல் குடலில் ஏற்படும் வாயுவானது மனிதனைச்சில நேரங்களில் திக்குமுக்காடச் செய்து விடுகின்றது.

மரம் ஒன்று கிளைகள் பல. . . .

வாயுக்களில் அண்டவாயு, அபானவாயு, மந்தவாயு, பாரிசவாயு, பித்தவாயு, எரிகொம்புவாயு, எனப்பல வகை உண்டு கிளைகள் பலவாக இருந்தாலும் அதன் அடிப்படைக்காரணம் வயிறுதான். பொதுவாக வயிறுதான் நோய்களின் விளை நிலம். பலத்த ஏப்பம் வயிற்றுவலி என்பவை நோய்கள்அல்ல. ஆரம்ப நிலையில் வயிறு கெட்டிருகிறது, என்பதற்கான அறிகுறிகளே அவை. பொதுவாக அஜிரணத்திற்க்குப் பின்னே வாயு உற்பத்தியாகிறது. முதலில் வயிறு பாரமாகவும், உப்பியிருப்பது போன்ற உணர்வும் தென்படும். அடுத்தவேளை எடுக்கும் வழக்கமான பசி உணர்வு ஏற்ப்படாது. நெஞ்சுப்பகுதியில் எரிச்சல் உணர்வும் வலியும் ஏற்படும்.

வாயுபடுத்தும் பாடு . . .

வயிற்றில் இரைச்சலும், கர்புர் என்ற சத்தமும் தென்படும். வாயு உடலைவிட்டு வெளியேறாத நிலையில் உப்பி உட்பகுதியை அழுத்த ஆரம்பித்துவிடும் குடலைப்பெருகச்செய்து வலியுணர்வை ஏற்படுத்தும். வயிற்றில் உள்ள நரம்புகள் புடைத்துக்கொள்ளும் வாயுவானது வயிற்றின் மேல்பகுதிக்கு வரும்பொழுது டயாஃப்யரம் ( diaphragm) என்று சொல்லக்கூடிய உதரவிதானம் மேல் நோக்கி அழுத்திய நிலையில் நின்றுகொள்ளும். இந்தக்கால கட்டத்தில் நெஞ்சில் இறுக்கமான உணர்வு தென்படும்.

நெஞ்சில் படபடப்பு, அடிக்கடி முகம், கை, கால்களில் வியர்ப்பது. இதயத்தில் குத்தல், வலிபோன்ற உணர்வுகளும் சேர்ந்து கொள்ளும். சிலர் இதனை ஹார்அட்டாக், என்று எண்ணி பயந்து விடுவதும் உண்டு. இவைதற்காலிக வாயுக் கோளாறினால் ஏற்படும் விபரீதங்கள் நாள்பட்ட மலச்சிக்கல். அஜிரணம் இவைகளால் வேறு சில அறிகுறிகளும் உடலில் தோன்றுவதுண்டு. குடலில் தேங்கிப்போன வாயுவானது நரம்புகள் மூலம் மிகுதியாக அழுத்தப்பட்டு உடலின் பல பகுதிகளையும் சென்று தாக்க ஆரம்பிக்கும். நீடித்த ஓரு பக்கத்தலைவலி, தலைச்சுற்றல், கண்பார்வையில் மங்கல், நரம்புத்தளர்ச்சி, தூக்கக்குறைவு, பிடரி கழுத்து, முதுகு, இடுப்பு, தோள்பட்டை இவைகளில் மாறுப்பட்ட வலிஉணர்வு, மூட்டுக்களில் வலியோடு சேர்ந்த வீக்கமும், வறட்டு இருமல் போன்ற அனைத்திற்க்கும் பல்வேறுபட்ட வாயுக்களே காரணம் என்பது அனுபவம் கூறும் உண்மை.

மேற்கூறிய நோய்களுக்கான மூலகாரணம் வாயு என்ற ஒன்றாக இருப்பினும், அவரவர், உடற்கூறு வயது.உணவுமுறை, பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நோய் நிலைமைகளின் பெயர்களும் அதன் அறிகுறிகளும், உடலில் அவை தென்படும், பகுதிகளும் மாறுபடுகின்றன.

மனோநிலையில் மாற்றங்கள். . .

எல்லோருக்குமே பொதுவாக கெட்ட கனவுகள் வருவதில்லை. ஆனால் மலச்சிக்கல் மற்றும் அஜிரணவாதிகளை அது சும்மா விடுவதும் இல்லை.

குழப்பமான கனவுகள் அடிக்கடி வந்து சிரமம் கொடுக்கும். காலையில் எழுந்தால் இரவில் முழுமையாகத்தூங்கிய உணர்வு சிறிதும் இருக்காது.

மூளையின் நரம்புகளுக்கு கட்டுப்பட்டே வயிறு தன் இயக்கத்தை நடத்துகின்றது. பல நோரங்களில் வயிற்றில் உண்டாகும் வாயு நரம்புகளைத்தாக்கி மூளையின் செயல்பாட்டையை மாற்றி விடுவதும் உண்டு.

அதன் விளைவாக நாள்பட்ட நோயாளிகளுக்கு எதிலும் இனம் தெராயாத வெருப்பு கோகம், சிடுசிடுப்பு, அவசியமற்ற கவலை,பொறுமையின்மை, மனம்,பதை தைக்கு, ஞாபக மறதி எல்லாமே அவர்களுள் வந்து புகுந்து கொள்ளும்.மேலும் எளிதில் சோர்வடைதல், தாழ்வு மனப்பான்மை, எண்ணத் தடுமாற்றம், எச்செயலிலும் திடமாக ஈடுபட இயலாமை, மனத்தளர்ச்சி.பய உணர்வு. முடிந்த அளவு தனிமையில் இருந்தால் நல்லது என்ற உணர்வு ஏற்படுதல், போன்றவைகளில் பல எளிதில் வந்து அவர்களிடம் ஒட்டிக்கொள்ளும்.

வயிறு மட்டும் எந்தவித இடையூறுக்கும் ஆளாகாமல் இருந்து செயலாற்றி வருமேயானால் மேற்கூறிய எந்தச் சிரமும் நீடிக்காது.

தற்காலிக நிவாரணம். . . .

வாயுக் கோளாறுகளையும் அதன் காரணமாக உடலில் ஏற்படும் விளைவுகளையும் தற்காலிகமாக நீக்குவதற்கு உலகில் எத்தனையோ
விதமான மருந்து வகைகள் உண்டு. அவை அவ்வப்பொழுது மட்டுமே நிவாரணம் கிடைக்கப் பயன்படும் என்றும், மருந்துகளால் நோய்க்குண்டான அடிப்படைக் காரணத்தை நீக்க இயலவில்லை என்பதையும் மருத்துவ உலகம் ஒத்துக் கொள்கிறது. மேற்கூறிய தொல்லைகள் உண்டாவதற்கான காரணங்களை அறிந்து, புரிந்துகொண்டு அவைகளை முறையாக நீக்கிக்கொண்டோமேயானால் எந்த கஷ்டத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை என்பது திண்ணம்.

பெருந்தீனியால் வயிறு அழுகின்றது. . .

முதலில் கூறியப்படி வாயுத்தொல்லைகளுக்கு அடிப்படைக்காரணம் உண்ட அணவு மிகத்தாமதமாக ஜிரணிப்பதும், நீடித்த மலச்சிக்கலும் ஆகும்

அறிந்தோ அறியாமலோ நாம் வேக வேகமாகச் சாப்பிடுகின்றோம். ருசியின் காரணமாகக்குடல் ஜிரணிக்கும் அளவைக்காட்டிலும் சற்று அதிகமாகவே சாப்பிட்டும் விடுகின்றோம். உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்தானது.முதலில் உமிழ் நீருடன் கலந்து வாயிலும், மீதம் இரைப்பையிலும் ஜிரணிக்கப்பட வேண்டும் எதையும் நன்றாக மென்று தின்பதற்காகவே இயற்கை பற்களை வாயில் அமைத்திருக்கிறது.

ஆனால் எந்த உணவையும் நாம் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிடுவதில்லை. மேலும் பழக்கத்தின் விளைவால் அரிசி உணவுடன், சாம்பார், ரசம், குழம்பு தயிர் என்று கலந்து உருண்டை உருண்டையாகத் திரட்டி உள்ளே அனுப்பி விடுகின்றோம். விளைவு-முழு ஜீரணப்பாரமும் இரப்பை சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அளவிற்கதிகமான உணவு உண்ணும் போதும் இடைவேளையின்றி உணவு அடிக்கடி உள்ளே போதும், இரைப்பை சுருங்கி விரிய வழியின்றி செயல்படாது ஸ்தம்பித்து விடுகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்குமேல் உணவு இரைப்பையில் ஜீரணிக்க முடியாத நிலையில் தங்கியிருந்தால் அது புளித்துக்கெட்டுப்போய்விடும். இந்த சூழ்நிலையில்தான் வாயு வயிற்றில் உற்பத்தியாகிறது.

இது போக அரிசி உணவு, பருப்பு வகைகள், நெய், எண்ணெயில் பொரித்த காய் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சேர்த்து உண்கிறோம். பொதுவாக வாயில் மாவுப்பொருளும், வயிற்றில் (இரைப்பையில்) மாவு புரதப்பொருளும், சிறுகுடலில் கொழுப்புப் சத்துக்களும் முறையோடு ஜீரணிக்கப்படுகிறது.

எல்லா வகை உணவுகளையும் ஒரே வேளையில் சேர்த்து சாப்பிடும்பொழுது ஜீரணத்தில் தடங்கள் ஏற்பட்டு வயிற்றில் குழப்பமும், ஏன் ஒரு பெரும் போராட்டமே நிகழ்கின்றது எனலாம்.

உண்ட உணவு முறையாக இரைப்பையில் ஜீரணிக்க 4 மணி நேரமாகும். அதற்க்கும் நாம் அனுமதிப்பதில்லை. காலை 11மணி மாலை 4 என்று உணவு வேளைகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் கிடைக்கும் பொழுதெல்லாம் இயற்கைக்கு புறம்பாகத் தயாரிக்கப்பட்ட பூரி, பிரியாணி, பரோட்டா, வடை போண்டா, இனிப்பு, காரம் போன்ற எண்ணெய்ப் பண்டங்களையும், சூடான பானங்களையும் வயிற்றில் திணிக்கின்றோம். உண்மையில் சிற்றுண்டிகள் எல்லாமே நமது வயிற்றைக் கெடுப்பவைகளே ஜீரணிக்கருவிகள் ஜீரணிக்க முடியாத வகையில் பலநாள் , பலமாதம் இவ்வித பல பாவகரமான காரிநாங்களைச் செய்து வந்ததன் பயனாகக் கல்லீரல், வயிறு போன்றவை கெட்டு பலஹீனப்பட்டு பிற்பட்டு எது சாப்பிட்டாலும் மந்தமான நிலையில் ஜிரணிக்கத் திணறுகின்றன.

மாமிச உணவுகள், நாட்கணக்கில் செய்து வைத்த எண்ணெய் பண்டங்கள் இவற்றை அடிக்கடி உண்பவர்கள் மட்டுமே மலச்சிக்களின் மிகுதியால் கூட்டங்களில் மற்றவர்கள் மூக்கைப்பொத்திக் கொள்ளும்படி செய்து விடுகின்றனர். சிலரிடம் எதிரில் நின்று பேச முடியாத அளவிற்குவாய் நாற்றம் தென்படும்.

அவர்களது வயிற்றினுள் கெட்டு அழுகிப்போன கழிவுகள் நாள் கணக்கில் தேங்கியிருக்கின்றன என்பதற்கான அறிகுறியே அது. அதனைகனைச் சூடு என்று பொதுவாக கிராம்ப்புறங்களில் சொல்வதுண்டு. வாயுத் தொல்லைக்கு ஆளானவர்கள் அடிக்கடி வயிற்றை எக்கி ஏப்பம் விடுவது வழக்கம். வாயைத் திறந்து மீண்டும் மீண்டும் காற்றை வெளிவிடும் வரை அதில் நிறைவு கிடையாது. பதிலாக இரண்டொருமுறை வாயை மூடி மூக்கின் வழியாக நீளமாக மூச்சு இழுத்து விட்டால் ஏப்பம் தானே அடங்கி ஒடுங்கிவிடும். கர்ப்பிணிகளும் வேறு சிலரும் உடன் நிவாரணம் தேடி அடிக்கடி சோடாபானங்கள் சாப்பிடுவதுண்டு.

அது தற்காலிகமாகவே பலன் அளிக்கும். ஆனால் தொல்லை மீண்டும் தொடரும்.

வாழைக்காய் உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், இவைகளில் ஒரு துண்டு சாப்பிட்டாலூம் தலைவலி வருவதோடு இடுப்பு, முதுகுபிடித்துக் கொள்வதைப் பார்க்கின்றோம்.

அரிசி,கோதுமை போன்ற மற்ற மாவுத் சத்துக்களைக்காட்டிலூம் வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள மாவுச்சத்து மிக மென்மையானது.

இதில் உள்ள மாவுச்சத்து மிக எளிதானவகையில் விரைவில் ஜிரணிக்கப்ட்டுவிடுகின்றது. சப்பாத்தி, பூரி, சாதம் போன்ற உணவுடன் இவைகளை சேர்த்து சாப்பிடும் பொழுது மட்டுமே விரைவில் ஜீரணமான கிழங்கு புளித்த நிலையில் வாயுவை உற்பத்தி செய்து விடுகின்றது. மலச்சிக்கல் இல்லாத நிலையில், வயிற்றில் உள்ள உறுப்புக்கள் வலுவோடு இயங்குகின்ற வரையில் உருளைக்கிழங்க நம்மை ஒன்றும் செய்து விடாது. நமது நாட்டின் அரிசி உணவைப் போல வெளிநாட்டவரின் பிரதான உணவு உருளைக்கிழங்கு தான்.

சிலருக்கு வயிறு காலியாக இருந்தாலும் வாயு உண்டாகும். அது மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு மட்டுமே உண்டாகும் என்பதே உண்மை. வாயு முற்றினால் வாதம் என்பது பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. குடல் கெட்டபின் வாததிற்கு வித்திடுகின்றது. எனவே வாயுத்தொல்லை உள்ளவர் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் வாயுத்தொல்லை நம்மை விட்டு நீங்குவதோடு எப்போதும் நம்மை நெருங்காது என்பது உறுதி.


நீக்கும் வழிமுறைகள். . .

வாயுத் கோளாறு உள்ளவர்கள் முதலில் சாத்வீக எனிமா எடுத்து, தொடர்ந்து மூன்று தினங்கள் பழச்சாரு, பழ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்

பழ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பழ உணவுகள் மலச்சுசிக்களை நீக்குவதோடு அஜிரணம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்கிறது. உணவில் நார்ப்பொருள் அடங்கிய பதார்த்தங்களைச் சற்று அதிகமாகச் சோர்த்துக் கொள்ளவேண்டும். நார்ப்பொருள் தவிடு நீக்கப்படாத நவதானியங்களிலும், பழுத்த பழங்களிலும், கீரைகள், காய்கறிகளிலும் அடங்கியுள்ளன. இவை உணவுடன் சேரும்பொழுது மற்ற உணவுகளையும் சோர்த்து இலகுவில் ஜிரணிக்க உதவுகின்றன மலம் முறையாக வெளியேற வழி செய்து கொடுக்கின்றன. மற்ற உணவுகள் புளித்துப் போகாமல் தடுத்துக்கொள்கின்றன.

முறையாக ஒன்றை ஆரம்பித்தால் வெற்றியில் பாதி, முதலிலேயே கிடைத்துவிடும் என்பது ஒரு சீனப் பழமொழி. எந்த உணவையும் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிட்டால் அஜீரணமாக வாய்ப்பு ஏற்படாது. எளிய உணவு களாகியபழங்கள், காய்கறிகள், கீரைகள் இவைகளை முதலிலும், சற்று கடினமான உணவு வகைகளை இறுதியிலும் முறையாக எடுப்பது அஜிரணத்தைத் தடுக்கும். உணவு உண்ணும் போது இடையிடையே தண்ணீரையும் குடிப்பது நல்லதல்ல. அவ்வாறு தண்ணீரைக் குடித்தால் உமிழ்நீரும், இரைப்பையில் சுரக்கும் ஜிரண நீரும் தண்ணிரில் நீர்த்துவிட ஏதுவாகிறது. இதுவே அஜீரணத்திற்குக் காரணமாகவும் அமைந்து விடலாம்.

உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னும், பின்னும் அதிக அளவில் தண்ணிர் சாப்பிடும்வரை வயிற்றில் எவ்விதக் கோளாறும் ஏற்படாது. உணவின் இடைவேளை நேரங்களில் எடுக்கும் இடைத்தீனி பல நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. தண்ணீர், பழரசம் இளநீர், மோர். இவைகளைத்தவிர வேறு ஒன்றும் உட்கொள்ளாமல் இருப்பின் ஆரோக்கியம் நமக்கே சொந்தமாகிவிடும்.

இரவில் தூங்குவதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பாக உணவை முடித்துக்கொள்ளவேண்டும். அது உணவு வயிற்றில் கெடாது இருக்கப் பயன்படும். கோபம், பயம், கவலை அவசர மனோநிலையில் வேகமாக உணவை உண்ணக்கூடாது. அப்போது ஜீரணநீர் முறையாக சுரப்பதில்லை வயிற்றுவலி, வயிற்றிப் பொருமல் போன்ற எவ்வித வேண்டாத அறிகுறிகள் ஏற்பட்டாலும் தலைவலி, உடல்வலி போன்ற எந்தக் குறைபாடுகள் தென்பட்டாலும்,அவ்வப்போது சாத்வீக எனிமா எடுத்துக்கொள்ள வேண்டும். அது நம்மை எப்போதும் எந்த நோய்களிலிருந்தும் மீட்டுக்கொள்ள பக்க பலமாக இருக்கும்.

உடல் உழைப்பு இல்லாதவர்கள், காலையில் எளிய ஆசனப்பயிற்சிகளைக் சொய்வதோடு மாலையில் சிறிது தொலைவு நடந்து வருவது நல்லது. ஒரே வேளையில் பலவகைப்பட்ட உணவுகளை எடுப்பதைத் தவிர்த்து விடுதல் வேண்டும். பசி இல்லாத போது பழ உணவுகளையும், நிராகாரத்தையும் உட்கொள்ளலாம். ஒவ்வொரு வேளை உணவும் ஜந்துமணி நேர இடைவெளியில் இருப்பது நல்லது. பசித்துப்புசிக்க வேண்டும். பொதுவாக சாப்பாட்டின் இறுதியில் இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு உள்ளபோதே எழுந்துவிடும். எவரையும் வாயுக் கோளாறு நெருங்குவதில்லை.

மலச்சிக்கலும், அஜிரணமும் மனித ஆரோக்கியத்தின் எதிரிகள். பொதுவாக எண்ணெயை ஊற்றிவாய்க்கு ருசியாக எதுவெல்லாம் சமைக்கப்படுகிறதோ அவை எல்லாம் வயிற்றைக் கெடுப்பவைகளே. காய்கறிகீரை இவற்றோடு தேங்காய்த் துறுவல் சேர்த்து பக்குவமாக வேகவைப்பதே சிறந்தது. ருசி குரைவாக இருப்பதில் குற்றமில்லை. ருசி குறையும் போது உணவின் அளவும் குறையும். குறைந்த உணவு நிறைந்த ஆயுள். வாயை வைத்துத்தான் வயிறு. வயிற்றை வைத்துத்தான் வாழ்வு. அஜிரணம் மற்றும் மலச்சிக்கலற்ற உடலில் இரத்தம் கெடாது. உடலின் இயக்கத்தில் தடங்கள் ஏற்படாது. உறுப்புக்கள் பாதிக்கப்படாது. இயக்கத்தில் குறைபாடு இல்லாத உடல் முழுநலம் பெறும். நலமான உடலுக்கு ஆயுள் அதிகம்தானே! எனவே நோயறே வாழ்வே குறைவற்ற செல்வம், என்பதை மனதில் கொண்டு உண்பதற்காக வாழாது வாழ்வதற்காக உண்போம் உறுதி கொள்வோம்.

வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம். . . .

வாயுப் பிரச்சனை தீர சுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .

*சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொண்டால் வாயு சேராது.

*பசும்பாலில் பத்து பூண்டு பற்களைப் போட்டுக் காய்ச்சி குடித்தால் வாயு சேராது .

*இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித வாயுக் கோளாறும் தீரும்.

*புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு வர வாயு அகலும்.

*வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான் இலை இவைகள் வாயுவைப் போக்கும்.

*ஓமம், கடுக்காய், வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு , சுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும் வாயுவைப் போக்கும்.

*மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது , இலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு நாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத் தடுத்திட முடியும்.

வாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு . . .

காலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலாம், மதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும் மறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி பூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன் உண்ண வாயுப் பிடிப்பு , மூட்டு வலி குறைந்திருக்கும்.

திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால். . .

*ஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக் குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.

*ஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு கலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள் அருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்.

*முடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால் உண்டான உடல் அசதித் தீரும்.

*இஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி ஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை அறவே நீங்கும்.

Continue reading →
Saturday, September 22, 2012

மூட்டைப் பூச்சியின் வரலாறு !!!கொஞ்சம் படியுங்க! நிறைய தெரிஞ்சுங்க!!

0 comments
மூட்டைப் பூச்சியின் வரலாறு. கொஞ்சம் படியுங்க! நிறைய தெரிஞ்சுங்க!!

சிறு வயதில் ஸ்கூலுக்கு போகும் போது சில வீட்டின் சுவர்களில் "மூட்டைப் பூச்சி அத்துப் போச்சு" என்று எழுதி வைத்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் மூட்டைப்பூச்சி என்றால் என்னவென்று
ம் அதன் அர்த்தமும் எங்களுக்கு தெரியாது. வீட்டில் ஏதாவது ஒரு பூச்சியை அடித்தால் கூட "மூட்டைப் பூச்சி அத்துப் போச்சு" என்று சொல்லி சிரிப்போம்.

சவுதிக்கு வந்த பிறகு அம்மாடியோவ் ... மூட்டைப் பூச்சி இருக்கா என்று கேட்டுக் கொண்டு தான் நண்பர்கள் ரூமின் இருக்கையில் உட்காரும் அளவுக்கு ஆகிப் போனது.

வளைகுடா, மற்றும் இதர வெளிநாடுகளில் வாழும் பேச்சிலர்ஸ் முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் வரை மூட்டைப் பூச்சி தொல்லை யினை அனுபவித்திருப்-பீர்கள்/பார்கள். அதை ஒழிக்கு ம் முறையினை பேச்சுப் பராக்கில் தெரிந்து கொள்ளலாமா? சரி வாங்க...
-------
எங்கள் வீட்டில் கொஞ்ச நாளா மூட்டை பூச்சி இருக்குப்பா, என்ன செய்வதுனே தெரியலைப்பா, ரெம்ப கவலையா இருக்குப்பா, தூங்கவே பயமா இருக்குப்பா, தயவு செய்து உங்கள் ஆலோசனை தாருங்கள்ப்பா, மிகவும் கவலையாக உள்ளது...ரேணுகாதேவி.

சுவரும் தரையும் சேரும் ஓரங்களில் பரவலாக மூக்குப்பொடி தூவினால்மூட்டைப்பூச்சி தொல்லை குறையும். - திருமதி கோமு

ஹாய் ரேணு, மூட்டை பூச்சால் நானும் ரொம்ப அவதி பட்டுள் ளோம். முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். அதனை பிடித்து தண்ணீரில் போட்டு விடுங்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். பிறகு. வீட்டில் எதாவது மர சாமான்கள் இருந்தால் உடனே எடுத்து வெயிலில் காய வைய்யுங்கள். மரசாமான் களில் பிடித்தால் விடவே விடாது. பிறகு மூட்டை பூச்சி இருக்கும் இடங்கள்ல் மண்ணெண்ணையை ஒரு துணியில் எடுத்து தெயுங்கள் இப்படி தினமும் செய்தால், அனைத்தும் அழிந்துவிடும். - பிரியதர்சினி

மூட்டை பூச்சி போகணும்னா கடைகளில் மூட்டை பூச்சி மருந்து வாங்கி இரவில் அடிங்க ... கண்டிப்பாக மூட்டை பூச்சி எல்லாம் செத்து போய் விடும்..லக்ஷ்மி மாசானம்

மூட்டை பூச்சி மருந்து ரொம்ப ஆபத்தானது. அதை அடித்தால் 24 மணிநேரமாவது வீட்டிலிருந்து வெளியே போய் விட வேண்டும்.. ஆனால் அதை தவிற எனக்கு தெரிந்து வேற வழியில்லை..நல்ல எல்லா சாமானை யும் பெரிய கவர் போட்டு காற்று புகாமல் ஒட்டி விட்டு மருந்தடியுங்கள்..

கிச்சனில் உள்ள உணவுப் பொருட்களை எங்காவது பக்கத்து வீட்டிலாவது மாற்றி விட்டு மருந்தடிப்பது நல்லது..குடிக்கும் தண்ணீரை கூட முடிந்தால் வெளியில் வைத்து விடலாம்.. சின்ன குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். பழைய மர சாமான்கள் அதிகம் வீட்டில் வைக்க வேண்டாம் தூக்கி போட்டு விடுங்கள்..கார்பெட் இருந்தால் அதையும் எடுத்து விடுங்கள். - தளிகா

"அறுசுவை"யில் படித்ததில் பிடித்தது.
@ எம் அப்துல் காதர்

நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவைகளை மோப்பம் பிடித்து இவை நம்மைத் தேடி வருகின்றன.

மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள்.

1) இதற்கு ஹெவி டியூடி பெஸ்ட் கன்ட்ரோல் செய்ய வேண்டும். விஷத்தன்மை அதிகம் ஆதலால் ஆபத்தானது.எச்சரிக்கையாகக் கையாளனும்.

2) இரண்டு நாள் விஷத் தன்மை முறிவு ஏற்படும்வரை வெளியில் தங்க வேண்டும்.

3) முதலில் வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் நன்கு மூட்டை கட்டி வைத்து வெளியில் வைக்கவும். அல்லது சுடுதண்ணீரில் துவைத்து எடுக்கவும்.

4) PEST கண்ட்ரோல் செய்த பின்னர் 24 மணிநேரமாவது யாரும் அறையை பயன்படுத்தக் கூடாது.

5) அடுத்த நாள் வேற ஆளை விட்டு மருந்தை எடுத்து களைந்து விட்டு ஜன்னலெல்லாம் திறந்து வைத்து விட்டு வர வும்..பிறகு ஒரு நாள் கழித்து போய் சுத்தம் செய்யவும்..

6) சமையலறையில் உள்ள எல்லா பாத்திரங் களையும் கழுவி எடுத்து வைக்கவும்..

வேறு மற்றும் பாதுகாப்பான முறை

கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.

நன்றி : கொங்கு தென்றல்
----
மூட்டைப் பூச்சியின் வரலாறு!!

மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன

வகைகள்

பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்ப மண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்ப மண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை.

மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(Leptocimex boueti) வௌவால்களை யும் மனிதனையும் தாக்குபவை. Cimex pilosellus மற்றும் Cimex pipistrella என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (Haematosiphon inodora) வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.

உடலமைப்பு

வளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கை யில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப் பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக் கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக் கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டு

உண்ணும் முறைகள்

பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.

இப்பூச்சிகள் இரதத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்து கின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவ தில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.

மனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள்

இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்பு களும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டி.டி.டி(D.D.T) மருந்து உபயோகத்தின் மூலமாக முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்த மூட்டைப் பூச்சிகள் மீண்டும் நியூயார்க் போன்ற நகரங்களை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. கரப்பான் பூக்கிகளுக்கும் எலிகளுக்கும் பழக்கப்பட்ட நியூயார்க் நகர மக்கள், இப்போது மூட்டைப் பூச்சிகளைப் பற்றி ஆரம்பப் பாடம் படிக்கிறார்கள்.

மூட்டைப் பூச்சிகளைப் பற்றி தகவலை மக்களுக்கு அளிக்க ஒரு இணையதளத்தையும் உருவாக்கி உள்ளது நியூயார்க் மாநகரம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் இங்கு எழுபத்தியொரு சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது.

நியூயார்க்கின் இப்போதைய பெயர் மூட்டைப் பூசசிகளின் தலைநகரம் இந்த நகரம் 500,000.00 டாலர் தொகையை மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்கும், மக்களிடையே விழிப்புணர்வப் பரப்பவும் செலவிட்டிருகிறது.

பகல் முழுவதும் ஒளிந்து இருக்கும மூட்டைப் பூச்சிகள் இரவில் வெளிவருகின்றன. இரத்தைதைக் குடித்து வாழும் இந்தப் பூச்சிகளைக் முற்றிலுமாக அழிப்பது ஒருகடினமான செயல். ஒருவர் கடிபடும் உணர்ச்சியோ கடியின் வலியோ தெரியாத்தனால் இவை உடனடியாக் கொல்லப்படுவதில்லை. படுக்கையின் ஓரங்களில் கரும்புள்ளிக் குவியலாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஒரு வலி போக்கும் திரவத்தை நம் உடலுக்குள் செலுத்துகின்றன. அதனால் அவைக் கடிப்பது யாருக்கும் தெரிவதில்லை.

ஆனால் சிறிது நேரத்திலோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் கழித்தோ உடலில் தடிப்புக்களும் அரிப்பும் இருக்கும். மூட்டைப் பூச்சிகள் பதுங்க இடம் தேடி அலைந்து கொண்டு இருப்பதால் அவை எல்லா மூலை முடுக்கு களிலும் ஒளிந்து கொள்கின்றன. பகலில் இவை கண்களுக்குத் தெரிவதில்லை.

நமது பெட்டிகளுக்குள்ளும் உடைகளுக் குள்ளும் ஏறிப் பதுங்கிக் கொள்ளும் இந்த அருவருப்பான பூச்சி அதிக அளவிற்கு அதிவேகமாகப் பரவ காரணம் சுற்றுப்புற தூய்மையின்மை என்றுக் கூற முடியாது. மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு இங்கே மக்களிடம் இல்லாதது தான். கிட்ட்த் தட்ட ஒரு தலைமுறைக்கு மூட்டைப் பூச்சி என்ற ஒரு பூச்சி இருப்பதே அமெரிக்கர் களுக்குத் தெரியாது.

ஒரு பெண் மூட்டைப் பூச்சி ஒரு முறைக்கு ஐநூறு முட்டைகள் இருக்கிறது. வழவழப்பானச் சின்ன சின்ன முட்டைகள் எதிலும் ஒட்டிக் கொள்ளும்.அதனால் மூட்டைப் பூச்சிகளின் குடியேற்றம் ஒரு இட்த்திலிருந்து இன்னோரு இட்த்திற்கு எளிதாகிறது. மேலும் இரத்த்த்தை மட்டும் குடித்து வாழும் இந்த பூச்சி இனங்களால் ஒரு வருடம் இரத்தமில்லாமல் வாழ முடியும்.இந்தப் பூச்சி இனங்கள் மனிதர்கள் மட்டுமில்லாமல் எலி, வெளவ்வால் அணில் போன்ற கொறித்துத் தின்னும் பிராணிகள் மூலமாகவும் பரவலாம். டி.டி.டி(D.D.T) பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது தடை செய்யப் பட்டிருப்ப தாலும் மூட்டைப் பூச்சிகள் பெருக ஆரம்பித்து இருக்கின்றன.

இந்தியக் கட்டங்களைப் போல் சிமெண்ட்டா லும் செங்கலாலும் கட்டப்படாமல் மரத்துகள் களால் செய்யப்பட்ட மர அட்டைகளால் கட்டப்படும் அமெரிக்கக் கட்டிடங்களிலிருந்து மூட்டைப் பூச்சிகளை வெளியேற்றுவது மிகக் கடினமாக உள்ளது. நம் நாட்டைப் போல கட்டிடங்களைக் கழுவி விட முடியாது.

வெளிப்புற அட்டைச்சுவருக்கும் உட்புற அட்டைச் சுவருக்கும் நடுவில் குளிர் வரமால் தடுக்க வைக்கும் செயற்க்கைப் பஞ்சுகளும் தரையில் போடப்படும் கார்பெட் என்ற கம்பளங்களும் மூட்டைப் பூச்சிகள் பதுங்கிக் கொள்ளவும் ஒரே கட்டிடத்தின் ஒரு மூலை யிலிருந்து இன்னோரு மூலைக்கு மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்லவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இயந்திரத்தாலேயே துவைத்துக் காய வைக்கும் பழக்கத்தால் மூட்டைப் பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் அமெரிக்க மக்கள்.

குழந்தைகளின் தலையில் பேன் இருந்தாலே பள்ளிக்கு வரக்கூடாது என்ற எழுதாதச் சட்டம் கொண்ட அமெரிக்க சமுதாயத்தில் இந்த கடுகளவுப் பூச்சிகள் பரபரப்பை உருவாக்கி யுள்ளன. செய்தி நிறுவனங்களுக்கு அன்றாட ருசிகரத் தகவல்களைத் தீனி போடுவது மட்டுமல்லாமல் ஒரு பிரபலாமன பொழுது போக்கு அம்சமாக மூட்டைப் பூச்சிகள் அவதாரம் எடுத்துள்ளன.

மூட்டைப் பூச்சிகளினால் பரவக் கூடிய நோய்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளும் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வது பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்து வருகினறன.

மூட்டைப் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத மக்கள் அதிவீரியமுள்ள பூச்சிக் கொல்லிகளைப் வீட்டுக்குள் பயன் படுத்தி குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுகும் கேடு விளைவிக்க வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. மனிதனின் கண்கள் மற்றும் தொண்டையை எரிச்சல் படுத்தும் இரசாயனப் பொருட்களும், மனித நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும் மருந்துகளும் பொது மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

ஐம்பது ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை மறந்திருந்த அமெரிக்க சமுதாயம் செப்ட்ம்பர் மாதம் சிக்காகோ நகரில் மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நட்த்துகிறது. பூச்சியின அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்து இந்தக் கருத்தரங்கில் குவிந்திருகின்றனர்.

மூட்டை பூச்சியை அழிக்க சில சுலபமான வழிகள்

114.8ºF அல்லது 46ºC க்கு அதிகமான வெப்ப நிலையில் மூட்டைப் பூச்சிகள் இறந்து போவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அதிக அளவு வெப்பத்தை சுமார் ஏழு நிமிடங்களுக்கு கட்டடங் களின் எல்லா அறைகளிலும், இடுக்குகளிலும் செலுத்தி மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும் முறை சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது. சுற்றுச்புற சூழ்நிலைக்கும் சுற்றி வாழ் உயிரின்ங்களுக்கும் தீங்கு விழைவிக்காத இந்த முறை ஒருவரின் வங்கித் தொகைக்கு ஒரு வேட்டு வைக்கிறது.

இன்னோரு கல்லூரி ஆராய்ச்சியில் பாட்டிலில் போடப்பட்ட திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைட்() மூட்டைப் பூச்சிகளை கவர்ந் திழுப்பதோடு அவற்றைப் பிடிக்கும் ஒரு பொறியாகவும் பயன் படுத்த முடியும் என்று தெரிகிறது.

Electric Steamer

The Electric Power Steamer kills bed bugs contact. Bed bugs are particularly succeptible to heat, which is why steaming can be a very effective way to kill bed bug and mite infestations in your home in tight and hard to reach places.

முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடை யில் நிறைய வந்து விடும். .மாஸ்கிங் டேப் கொண்டு ஒட்டி பிடிக்கும்
Continue reading →
Friday, September 21, 2012

முருங்கை பூக்கள் ....

0 comments
கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்



பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளித
ில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.
முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
Continue reading →

முத்துகள் உருவாவது எப்படி?

0 comments


இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக
்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.
கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.
அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.
ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.
இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.
Continue reading →

வேம்பு - மருத்துவ குணங்கள்

0 comments


1. வேப்பம்பட்டை விட்டு விட்டு வருகிற ஜீரத்திற்கு உதவுகிறது.
2. ரத்தத்தைச் சுத்திகரிக்கும் குணமிருப்பதால் குஷ்ட நோய்க்குக் கொடுக்கப்படுகிறது.
3. வயிற்றில் பூச்சித் தொந்தரவு உள்ளவர்களுக்கு இளந்தளிர்களை உப்புடனும் ம
ிளகுடனும் அரைத்துக் கொடுக்கப்படுகிறது.
4. காமாலை நோய்க்கு வேப்பிலைச் சாற்றைத் தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.
5. புண்களைச் சுத்தம் பட்டைக் கஷாயம் பயன்படுகிறது.
6. வேப்பிலையும், மஞ்சளையும் சேர்த்தரைத்து பற்றை அம்மைப் புண்களில் மருந்தாகப் பூசப்படுகிறது.
7. வேப்பெண்ணெய் புண்களை அகற்றுவதற்காக மேலே பூசப்படும்.
8. புத்தகங்களை அரிக்கும் பூச்சிகளை அகற்றுவதற்கு நூல் நிலையங்களில் வேப்பிலை பயன்படுகிறது.
9. வேப்பம்பூ, வாந்தி, ஏப்பம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும்.
10. வேப்பம் பழத்தின் ரசத்தை எடுத்து சரும வியாதியுள்ளவர்களுக்கு கொடுத்து வந்தால் நோய் தீரும்.
Continue reading →

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

1 comments


மூலிகை மருந்துகள்:

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.
Continue reading →

அல்சர் என்றால் என்ன....????

0 comments





மனித உடலில் அல்சர் நோய் (குடற்புண்) பற்றிய தகவல்:-




நம் வயிற்றுக்குள்ளே, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கிறது. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டில் காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானால், அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசாக கிழிந்தால் கூட, நேரடியாக வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமாக அடி வயிற்றில் வலி, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காமல் அப்படியே தொண்டையில் உணவு நிற்பது போன்ற ஒரு உணர்வு...... இதெல்லாம் இருக்கும்.... இது தான் அல்சர்....



அல்சர் வர கரணங்கள்:-

முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, மதிய சாப்பாட்டை தள்ளிப் போடுவது, அடிக்கடி காபி, டீயை குடிப்பது...

சாதாரண தலைவலி, காய்ச்சல் என்றதும் உடனே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.

சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் மாத்திரைகள் சாப்பிடுவதும் ஒரு காரணம். ஏதோ சுகமின்மைக்காக மருத்துவரை பார்க்கிறோம். மருத்துவர் "ஆன்ட்டிபயாடிக்" எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கும் போது, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்க வேண்டும். இதை சில மருத்துவர்கள் செய்வதில்லை. மருத்துவர்கள் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கி சாப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள். சில வகை மருந்துகளை சாப்பிடும் போது, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வருவதை உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள்..... காரணம் இது தான்....

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இவைகள் அனைத்தும் அல்சர் வருவதற்கு முக்கியமான காரணிகள்....

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்காக காலங்காலமாக சிலர் மருந்து சாப்பிடுவார்கள். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதற்கேற்றபடி சாப்பாடு இருக்க வேண்டும். இல்லையெனில் அதுவும் அல்சரை ஏற்படுத்தலாம். அபூர்வமாக சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்களுக்கும் அல்சர் இருக்கும்.

எடை குறைவது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம் கூட அல்சரின் அறிகுறிகளாக இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.



அல்சரை முழுமையாக குணப்படுத்திடலாம். வந்ததை போக்க சிகிச்சைகள் உண்டு. வராமல் இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு... சரிவிகித சாப்பாடு இரண்டும் முக்கியம். கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.....



அல்சர் வந்தவர்களுக்கு சில உபயோகமான விஷயங்கள்.....

நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரி கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக் கூட நன்றாக வேக வைத்து, மசித்து சாப்பிட வேண்டும். பாலுக்கு பதில் மோர் அதிகம் சேர்த்து கொள்ளலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். இனிப்புகள், அதிகமாக தாளித்த, பொறித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான "கிரேவி" இதெல்லாம் அறவே தவிர்க்க வேண்டும்.

மூன்று வேளையும் அதிகமாக சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம். எதையும் நன்கு "மென்று" பொறுமையாக சாப்பிட வேண்டும்.



நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்வது போலத்தான் அல்சர் வந்தவங்களுக்கும்...


"விருந்தும் கூடாது... விரதமும் கூடாது".
Continue reading →
Thursday, September 20, 2012

பிள்ளைகளின் சாப்பாட்டு !!!!

0 comments
பெற்றோர்கள் பிள்ளைகளின் சாப்பாட்டு விசையத்தில் கவனிக்க வேண்டியவை !!!

குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது என்பது பல தாய்மார்களுக்கும் போராட்டமான ஒரு விஷயமே. சில குழந்தைகள் மிகக் குறைவாக சாப்பிடும். சில குழந்தைகளுக்கு காய்கறிகளைப் பார்த்தாலே அ
லர்ஜீ. இன்னும் சில குழந்தைகள் நொறுக்குத் தீனிகளைத் தின்பதில்தான் ஆர்வமாக இருக்கும். குழந்தைகளை சாப்பிட வைப்பதில் உங்களுக்கும் பிரச்சினை இருக்கிறதா...?


1. உங்கள் குழந்தை ஒல்லியாக இருந்தால் அதற்காகக் கவலைப்படாதீர்கள். உடல் பருமனுக்கும், ஆரோக்கியத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை.

2. உங்கள் குழந்தை சராசரிக்கும் குறைவான எடை உடையதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் முதலில் உங்களது சந்தேகம் உண்மை தானா என மருத்துவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதற்கேற்ப சிகிச்சை கொடுங்கள்.

3. குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவு பார்ப்பதற்கு அழகாகவும், அளவில் குறைவானதாகவும் இருக்க வேண்டும். பார்த்தவுடன் அருவருப்பையோ, பிரமிப்பையோ தரும் உணவுகள் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ஒத்துக் கொள்வதில்லை. பெரிய தட்டில் கொஞ்சமாக உணவைக் கொடுப்பது நல்லது.

4. காய்கறிகளை வெறுக்கும் குழந்தைகளுக்கு அதற்கு பதில் பழங் களை, பழரசங்களைக் கொடுத்துப் பழக்குங்கள்.

5. குழந்தைகளுக்கு ஆரம்பத்தி லிருந்தே பச்சை காய்கறிகள் தின்னும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அப்படிப் பழக்கிவிட்டால் அவர்கள் சாப்பாட்டுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை.

6. பிஸ்கட்டுகளையும், நொறுக்குத் தீனி களையும் மட்டுமே உங்கள் குழந்தைகள் சாப்பிட்டால் அதற்காக அவர்களைத் திட்டாதீர்கள். இடையிடையே சத்தான ஆகாரங்களையும் கட்டாயப்படுத்திக் கொடுத்து உண்ணப் பழக்குங்கள். நான் கைந்து நாட்களில் பழகிவிடும்.

7. சாப்பாட்டை விட நொறுக்குத் தீனிகளில் அதிக ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு பழம், தயிர், பாலாடைக்கட்டி போன்ற சத்தான ஆகாரங்களை அடிக்கடி கொடுக்கலாம்.

8. காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, அவற்றுக்குப் பதிலாக காய்கறி வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கலாம்.

9. மீந்து போகும் காய்கறிகளை தோசை, வடை மாவுடன் கலந்து செய்து கொடுத்து விடுங்கள். புதுவித சுவையுடன் இருக்கும். காய்கறி களும் வீணாகாது.

10. சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒரு போதும் தண்டிக் காதீர்கள். வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான ஆசையையே நீக்கி விடும்.

11. குழந்தைகளுக்கு தினமும் ஆறு டம்ளர் தண்ணீராவது அவசியம். இது வெறும் தண்ணீராகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பால், சூப், ஜூஸ் என எந்த திரவ வடிவிலும் இருக்கலாம்.

12. சர்க்கரை அல்லது இனிப்பு கலந்த தண்ணீரையும், பாட்டில் குளிர் பானங் களையும் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். இயற்கையான இனிப்புடன் கூடிய பழரசங்கள், பார்லி தண்ணீர் போன்ற வற்றைக் கொடுக்கலாம்.

13. குழந்தைகளை தினமும் ஒரே நேரத்திற்கு சாப்பிடப் பழக்குங்கள்.

14. குழந்தைகளைத் தனியே சாப்பிட வைப் பதை விட மற்ற குழந்தைகளுடன் சேர்த்து சாப்பிடச் சொல்லலாம். அப்போது வழக்கமாக சாப்பிடுவதை விடக் கொஞ்சமாவது அதிகம் சாப்பிடுவதைப் பார்ப்பீர்கள்.

15. பிள்ளைகள் தொடர்ந்து அழுது கொண்டு இருந்தால் தயவு செய்து அடிகாதிர்கள் அது அவர்களின் மனநிலையே கூட பதிக்க வாய்ப்பு இருக்கிறது
Continue reading →

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

0 comments
இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க !!!

உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
மா
துளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர்...
ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
மாதுளம்பழ தோல், அதனுள் இருக்கும் முத்து, விதை ஆகியவற்றை உள்ளடக்கிய பதப்படுத்தப்பட்ட பொருள் 60 பேருக்கு ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அவர்களுடைய உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களை இத்தகைய பொருள் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடப்பட்டது.
மாதுளம் பழத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளை சாப்பிட்டர்களின் உடல் செல்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தேய்வடைவது குறைவாக இருந்தது. அதாவது மூளை, தசை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பலவீனமாவதை குறைக்கிறது.
மேலும் முதுமைக்கு முக்கியமான அறிகுறியாக விளங்கும் தோல் சுருக்கத்துக்கு காரணமாக உள்ள செல்களின் டிஎன்ஏவை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் வயது அதிகமானாலும், தோலில் சுருக்கம் ஏற்படாது. இதனால் இளமையுடன் இருக்கலாம்.
இதய நோய் வராமல் தடுக்கவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் மாதுளம் பழம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக வெறும் முத்துக்களை சாப்பிடுவதைவிட அதன் தோல் மற்றும் விதை ஆகிய அனைத்தையும் பதப்படுத்தி சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும்
Continue reading →

தைராய்டு பற்றிய தகவல்கள் ..!

0 comments






  தைராய்டு பற்றிய தகவல்கள் ..!




தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?

கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான். இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் ந
மது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.

தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?

நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இளம் வயதில் புற்றுநோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.

காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் டாக்டர்? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?

ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.

தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?

தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.

தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.

1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.
2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.

ஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.

ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.

உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு?

பொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்பு விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.

தைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்?

குறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை. அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.

1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது, 2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து, 3. அறுவை சிகிச்சை. தைராய்டு அதிகமாக சுரக்கின்ற நோயாளிக்கு மருந்து மாத்திரையே நிரந்தரமான தீர்வாக அமையாது. 6 முதல் 12 மாதம் வரை மருந்து சாப்பிட்டு பார்த்து குணமாகவில்லை என்றால் அணுத்தன்மை உள்ள சொட்டு மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து குணப்படுத்தி விடலாம்.

அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சை பற்றி சொல்லுங்களேன்?

இன்று வேகமாக வளர்ந்து வரும் அணுக்கதிர் மருத்துவத்தில் இத்தகைய தைராய்டு பாதிப்புகளை கண்டுபிடிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஐசோடோப் எனப்படும் அணுக்கதிர் மருந்து உபயோகிக்கப்படுகிறது. கதிர் இயக்கத் தன்மை உடைய இந்த மருந்தை நோயாளிக்கு வாய் வழியாகவோ அல்லது ஊசி வழியாகவோ செலுத்தப்படும். உடலில் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும் புற்றுநோய்களையும் குறிப்பாக மூளை, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை கண்டுபிடிக்க முடியும். இந்த மருந்து பாபா அணுக்கதிர் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப் பட்டு இந்தியா முழுதும் அனுப்பப் படுகிறது. கழுத்தில் ஏதேனும் கட்டி இருந்தால் குழந்தைகள் படிப்பிலும், வளர்ச்சியிலும் மந்தமாக காணப் பட்டால், சுரப்பிகளில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

இந்த அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சையினை பெற்ற நோயாளி அன்றைக்கே வீட்டுக்குப் போய்விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டாம். ரத்த இழப்பும் இருக்காது. நோகாமல் தைராய்டு நோயை அகற்றுகின்ற அற்புதமான அதிநவீன மருத்துவம் இது.

சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே?

பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும்.

படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.

தைராய்டில் புற்றுநோய் வருமா?

தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.

1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.

பெரும்பான்மையான தைராய்டு புற்று நோயை ஆபரேஷனுக்குப் பிறகு அணுக்கதிர் சொட்டு மருந்தினை கொடுத்தே குணப்படுத்தி விடலாம்.
Continue reading →