ALT_IMG

Heart attack

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases: Headache, body ache, heart system, arthritis, fast heart beat, ... Readmore...

ALT_IMG

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள். உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான். குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொ ண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதை யும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம். Readmore..

Alt img

அடி வயிறு குறைய

அடி வயிறு குறைய ,தரையில் படுத்து கொள்ளவும்.பின்பு பாதம் தரையில் படும் படி மடக்கவும்.கைகளை தலைக்கு அடியில் வைத்து கொள்ளவும்.தலையால் கால் முட்டியை தொடவும்.அப்போழுது வயிறு உள்னோக்கி அமுங்கும்.நின்று கொண்டு கையால் கால் விரல் களை தொடவும்.அப்போது முட்டியை மடக்க கூடாது. முக்கியமா சாப்பிட்டவுடனே படுக்க கூடாது.இவ்வாறு செய்ய கண்டிப்பாக அடி வயிறு குறையும். Readmore...

ALT_IMG

How to Make Extra Money

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat Readmore...

ALT_IMG

Featured 5

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat Readmore...

Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts
Wednesday, October 3, 2012

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

0 comments


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
Continue reading →
Thursday, September 20, 2012

பிள்ளைகளின் சாப்பாட்டு !!!!

0 comments
பெற்றோர்கள் பிள்ளைகளின் சாப்பாட்டு விசையத்தில் கவனிக்க வேண்டியவை !!!

குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது என்பது பல தாய்மார்களுக்கும் போராட்டமான ஒரு விஷயமே. சில குழந்தைகள் மிகக் குறைவாக சாப்பிடும். சில குழந்தைகளுக்கு காய்கறிகளைப் பார்த்தாலே அ
லர்ஜீ. இன்னும் சில குழந்தைகள் நொறுக்குத் தீனிகளைத் தின்பதில்தான் ஆர்வமாக இருக்கும். குழந்தைகளை சாப்பிட வைப்பதில் உங்களுக்கும் பிரச்சினை இருக்கிறதா...?


1. உங்கள் குழந்தை ஒல்லியாக இருந்தால் அதற்காகக் கவலைப்படாதீர்கள். உடல் பருமனுக்கும், ஆரோக்கியத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை.

2. உங்கள் குழந்தை சராசரிக்கும் குறைவான எடை உடையதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் முதலில் உங்களது சந்தேகம் உண்மை தானா என மருத்துவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதற்கேற்ப சிகிச்சை கொடுங்கள்.

3. குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவு பார்ப்பதற்கு அழகாகவும், அளவில் குறைவானதாகவும் இருக்க வேண்டும். பார்த்தவுடன் அருவருப்பையோ, பிரமிப்பையோ தரும் உணவுகள் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ஒத்துக் கொள்வதில்லை. பெரிய தட்டில் கொஞ்சமாக உணவைக் கொடுப்பது நல்லது.

4. காய்கறிகளை வெறுக்கும் குழந்தைகளுக்கு அதற்கு பதில் பழங் களை, பழரசங்களைக் கொடுத்துப் பழக்குங்கள்.

5. குழந்தைகளுக்கு ஆரம்பத்தி லிருந்தே பச்சை காய்கறிகள் தின்னும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அப்படிப் பழக்கிவிட்டால் அவர்கள் சாப்பாட்டுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை.

6. பிஸ்கட்டுகளையும், நொறுக்குத் தீனி களையும் மட்டுமே உங்கள் குழந்தைகள் சாப்பிட்டால் அதற்காக அவர்களைத் திட்டாதீர்கள். இடையிடையே சத்தான ஆகாரங்களையும் கட்டாயப்படுத்திக் கொடுத்து உண்ணப் பழக்குங்கள். நான் கைந்து நாட்களில் பழகிவிடும்.

7. சாப்பாட்டை விட நொறுக்குத் தீனிகளில் அதிக ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு பழம், தயிர், பாலாடைக்கட்டி போன்ற சத்தான ஆகாரங்களை அடிக்கடி கொடுக்கலாம்.

8. காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, அவற்றுக்குப் பதிலாக காய்கறி வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கலாம்.

9. மீந்து போகும் காய்கறிகளை தோசை, வடை மாவுடன் கலந்து செய்து கொடுத்து விடுங்கள். புதுவித சுவையுடன் இருக்கும். காய்கறி களும் வீணாகாது.

10. சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒரு போதும் தண்டிக் காதீர்கள். வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான ஆசையையே நீக்கி விடும்.

11. குழந்தைகளுக்கு தினமும் ஆறு டம்ளர் தண்ணீராவது அவசியம். இது வெறும் தண்ணீராகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பால், சூப், ஜூஸ் என எந்த திரவ வடிவிலும் இருக்கலாம்.

12. சர்க்கரை அல்லது இனிப்பு கலந்த தண்ணீரையும், பாட்டில் குளிர் பானங் களையும் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். இயற்கையான இனிப்புடன் கூடிய பழரசங்கள், பார்லி தண்ணீர் போன்ற வற்றைக் கொடுக்கலாம்.

13. குழந்தைகளை தினமும் ஒரே நேரத்திற்கு சாப்பிடப் பழக்குங்கள்.

14. குழந்தைகளைத் தனியே சாப்பிட வைப் பதை விட மற்ற குழந்தைகளுடன் சேர்த்து சாப்பிடச் சொல்லலாம். அப்போது வழக்கமாக சாப்பிடுவதை விடக் கொஞ்சமாவது அதிகம் சாப்பிடுவதைப் பார்ப்பீர்கள்.

15. பிள்ளைகள் தொடர்ந்து அழுது கொண்டு இருந்தால் தயவு செய்து அடிகாதிர்கள் அது அவர்களின் மனநிலையே கூட பதிக்க வாய்ப்பு இருக்கிறது
Continue reading →
Wednesday, September 19, 2012

திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்

0 comments
மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான தாம்பத்ய உறவிற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் என்றுஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.சின்ன சின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்தை தொடும் விளையாட்டு வரை செக்ஸ் உறவு நீடிக்கும். இதற்கெல்லாமா கால நேரம் பார்ப்பார்கள். விடியும் வரை விளையாடலாமே என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடத்தில் முடிந்து விடுமாம்.இது தொடர்பாக செக்ஸ் தெரபி மற்றும் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த 50 பேர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் மகிழ்ச்சிகரமான செக்ஸ் உறவுக்கு வெறும் 10 நிமிடம் மட்டுமே போதும் என்று கூறியுள்ளனர்.தாம்பத்ய உறவின் போது 1 முதல் 2 நிமிடங்கள் என்பது யாருக்கும் பிரயோஜனம் இல்லாதது. மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 3 முதல் 7 நிமிடங்கள் வரை எனில் அது நார்மலான உறவு. அதே சமயம் நெட், வீடியோ போன்றவைகளில் பார்க்கப்படும் படங்களில் அதிக நேரம் உறவில் ஈடுபடுவதைப்போல காட்டுவது உங்களை சூடேற்றத்தான். அதேபோல நமக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே 10 நிமிடம் என்பது மட்டுமே உறவுக்கு ஏற்ற சரியான அளவு என்கின்றனர் நிபுணர்கள்.அதேசமயம் முத்தம், சீண்டல் போன்ற முன்விளையாட்டுக்களுக்கு நேரம் குறிப்பிடவில்லை. அது அரைமணிநேரம் வரைக்கூட நீடிக்கலாமாம்.இந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எரிக் கார்ட்டி, நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டால்தான் அது சந்தோசம் என்பது கிடையாது பத்து நிமிடத்திலும் மகிழ்ச்சிகரமான உறவில் ஈடுபடமுடியும் என்று இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனவே செக்ஸ் உறவின் உண்மையான தகவல்கள் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.எனவே தம்பதியர் நீண்ட நேர உறவிற்கு முயற்சி செய்து தோற்றுப்போவதை விட திருப்திகரமான உறவில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவதே சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
Continue reading →

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது !!!

0 comments
   பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது !!!

பொதுவாக குழந்தைகள் மிகவும் சுலபமாக நட்பை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பார்கள் , ஆனால் அது எல்லாக் குழந்தைகளாலும் முடியாது .இவ்வாறான குழந்தைகளை பெற்ற பெற்றோர், "என் பிள்ளை ஒரு மூடி டைப்
 யாரிடமும் பேச மாட்டான்" என்று பெருமையாகக்கூட கூறிக் கொள்வது வழக்கம் . ஆனால் அது அவர்களுக்குஅப்போதைக்கு சரியாய் இருக்கலாமே தவிர அவன் /அவள் வளர்ந்து பெரியவனாகும் பொது அந்த பழக்கமே அவனுக்கு /அவளுக்கு எதிராளியாகியிருக்கும் . அவன் நினைத்ததைக் கூட வெளிப்படுத்த இயலாமல் எல்லாவற்றுக்கும் தடையாய் அமைந்து விடும் சிலநேரத்தில் யாரிடம் எப்படி பழகுவது என்றுக் கூட தெரியாமல் தங்களை குழப்பிக் கொள்ளவும் நேரிடும்.

நல்ல சாப்பாடு , வசதியான வீடு , உயர்தரக் கல்வி என்று மட்டும் முடிவதில்லை பெற்றோரின் கடமை, அவர்களின் குழந்தைகள் வருங்காலத்தில் தங்கள் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையில் வரும் இன்னல்களை சமாளிக்கும் மனப் பக்குவத்துடனும், தனிமையில் இருந்தாலும்கூட எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் பெற்றும், குறிப்பாக மனரீதியாக எந்த வித தாழ்வு மனப்பான்மையும் ஏற்படவிடாமல் வளர்ப்பதிலும் பெற்றோரின் கடமையுள்ளது.

சில குழந்தைகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள,அதில் பெற்றோரின் பங்கும் இருக்கின்றது . ஏனெனில் வேலை நிமித்தம் பல பெற்றோர்கள் தொடர்ந்து இட மாற்றங்களை மேற்கொள்வது,அவ்வாறான சந்தர்ப்பங்களில் குழந்தைகளால் அவ்வளவு சுலபமாக இந்த இட மாற்றங்களுக் கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாவார்கள் . அவ்வாறான சூழ்நிலையில் தாங்கள் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்து அதையே பழக்கமாக்கிக் கொண்டும் வளருவார்கள். ஆகவே பெற்றோர் இதை உணர்ந்து குழந்தைகளிடம் நிறைய பேச வேண்டும் . அப்போது தான் அவர்களின் மனநிலையை அறிய முடியும் மேலும்

1. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை கூர்ந்து கவனித்து அதிலிருந்து அவர்களின் குறைகளை பக்குவமாய் பேசி தீர்க்க வேண்டும்

2. குழந்தைகளின் இயலாமையை கேலி பேசுவதோ பிறரிடம் கிண்டல் செய்வதோ கூடாது, மாறாக அவர்களுக்கு நடப்பை பெற எளிய வழிகளை சொல்லித் தரவேண்டும்.

3. சில குழந்தைகள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு தைரியத்தையும் ,மற்றம் குழந்தைகளுடன் பழகும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

4. அவர்களுக்கிருக்கும் நட்பு வட்டாரத்தில் மேலும் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி விட வேண்டும்.

5. தான் ஒரு நல்ல மனம் படைத்த பெண் /ஆண் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் பெற்றோரின் அணுகுமுறை இருக்க வேண்டும் .அந்த உணர்வை மற்றவர்களும் அறியும் வண்ணம் அவர்கள் நடத்தை இருக்க வேண்டும் என்று எடுத்து சொல்ல வேண்டும் .

6. மற்றவர்களோடு நாம் அன்போடு பழகினால் அவர்களும் நம்மிடம் அன்பு செலுத்துவார்கள் என்ற எளிய வழியைச் சொல்லி தர வேண்டும்.

7. பிறர் எதிர் பார்க்கும் முன்னரே மற்றவர்களுக்கு உதவி செய்யும் உயர்ந்த மனப்பான்மையுடன் வளர வேண்டும் என்று சொல்லவேண்டும்.

8. குழந்தைகள் மற்றவர்களைப் பற்றி புறம் பேசினால் அதில் ஆர்வம் காட்டாமல் தவிர்க்க வேண்டும் , மேலும் அந்த பழக்கம் தேவையற்றது என்றும் அந்த பழக்கம் நட்புறவுகளை துண்டித்து விடும் என்று சுட்டிக் காட்ட வேண்டும் .

9. மற்றவர்களின் கருத்தையும் மதிக்க வேண்டும், குறைந்த பட்சம் அவர்கள் சொல்லுவதை பொறுமையுடன் கேட்க வேண்டும் என்றும் இவ்வாறன குணம் இருந்தால் நிச்சயம் நட்பு வளரும் என்று வலியுறுத்த வேண்டும்.

10. தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதத்தில் இருந்தால்,நட்புறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சிறு பிராயத்திலிருந்தே அவர்களுக்கு சகிப்புத் தன்மை, பொறுமை போன்ற குணங்களை பழக்க வேண்டும்

11. மற்றவர்களோடு அன்போடு பழகவும் யுத்திகளை கற்றுத் தர வேண்டும் அதற்கு மூலக்கூறாக, பிறருடன் பேசும் போது எப்போதும் புன்சிரிப்போடு பேச வேண்டும் என்று பழக்க வேண்டும்

12 முக்கியமாக முன்பே குறிப்பிட்டது போல், அடிக்கடி ஏற்படுத்தும் இட மாற்றங்கள் குழந்தைகளின் மன நிலையை பெரிதும் பாதிக்கும் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும் காலங்கடந்து உணர்வதால் பயனில்லை ஏனெனில் அவர்கள் உணரும் போது அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டிருப்பார்கள் .ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குணாதிசயங்களை சிறு பிராயத்திலேயே இனங்கண்டு அவர்களுக்கு வேண்டிய உற்சாகத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நட்பில்லா வாழ்க்கை உப்பில்லா பண்டத்தைப் போன்று சுவையற்ரதாகிவிடும் என்று நட்பின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கு பெற்றோரும் உற்றத்துணையாய் இருந்து வருவதும் பெற்றோரின் கடமையே
Continue reading →